பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்
பழுப்பழுகல் : உருளைக்கிழங்கின் மோதிர நோய்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • கிழங்கு உருவாகும்போது வாடுதல் முக்கிய அறிகுறியாகும்.
  • இலையில் வாடுதல், மஞ்சள் நிறமாதல் மற்றும் குட்டையான அறிகுறியாகும்.
  • சைலம் திசு பழுப்பு நிறமாதல்
  • இளம் மொட்டுகள் கருப்பு நிறமாதலில் இருந்து பாதிக்கப்பட்ட கிழங்கின் மேற்பரப்பில் இருந்து பாக்டீரியா வெளியேறி, கெட்ட நாற்றம் வெளியேறும்.
     
  வாஸ்குலர் வளையம்   பாக்டீரிய கசிவுகள்   வாஸ்குலர் திசு அழுகல்
நோய் காரணி:

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • பாதிக்கப்பட்ட மண் மற்றும் விதை கிழங்குகள் ஆரம்ப தொற்று முக்கிய காரணமாக உள்ளது.
  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடியின் பாகங்கள் சிதைந்து, எண்ணற்ற பாக்டீரியாவை மண்ணில் வெளியேற்றுகிறது. இது எல்லா பருவத்திலும் காணப்படுகிறது.
  • மண்ணில் உள்ள பாக்டீரியா, காற்று மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவும்.
  • இந்த தொற்று, வேர்களில் உள்ள காயங்கள் மூலம் ஏற்படுகிறது.

நோய் தோன்றும் சூழ்நிலைகள்:

  • வெப்பநிலை 25° - 35°செல்சியஸ். ஆர்.ஹெச். 50% மேல் மற்றும் பி.எச். 6.2-6.6, நோய் உருவாவதற்கான சூழ்நிலை ஆகும்.
  • அமில மண் ஏற்றதல்ல.
கட்டுப்படுத்தும் முறை:
  • கோதுமை மற்றும் உருளைக்கிழங்கை பயிர் சுழற்சி செய்யலாம்.
  • எதிர்ப்பு சக்தி கொண்ட சொலனம் புரேஜா போன்ற கிராம்பைப் பயன்படுத்தலாம்.
Source of Images:
http://fera.co.uk/plantClinic/documents/factsheets/brownrot.pdf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015